கொழும்பு மாநகர சபை மோசடிகள் தொடர்பில் ரோசி சேனநாயக்கவிடம் விரைவில் விசாரணை
கொழும்பு மாநகர சபைக்குள் நடந்ததாகக் கூறப்படும் மோசடி குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஊழல், மோசடிகள் ஆணைக்குழு, அது தொடர்பில் ரோசி சேனநாயக்கவிடம் இவ் வாரம் விசாரணையொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கொழும்பு மாநகர சபைக்குள் நடந்த பெரிய அளவிலான ஊழல் மற்றும் மோசடி குறித்து விசாரிப்பதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ரோசியிடம் விசாரணை
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, கடந்த ஜுன் 29ம் திகதி முடிவடையவிருந்த ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளார்.
2010 முதல் 2025 வரை சபையில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் மற்றும் மோசடி குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆணைக்குழு, அந்தக் காலகட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் மேயர்களை விசாரணைக்கு அழைக்கத் தயாராகி வருகிறது.

அதன்பிரகாரம், முன்னாள் மேயர் ரோசி சேனநாயக்க இவ்வாரம் ஆணைக்குழுவின் முன் முன்னிலையாக உள்ளார்.
மாநகர சபையில் அவர் பதவி வகித்த காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் பல சம்பவங்கள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்படும் என ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.