ஆரையம்பதி பாலமுனை சந்திபேருந்து தரிப்பு நிலையத்தின் கூரை காணவில்லை! மக்கள் கடும் விசனம்
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியிலுள்ள ஆரையம்பதி பாலமுனை சந்தியில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து தரிப்பு நிலையத்தின் கூரை தகடுகள் இல்லாமையால் மக்கள் கடும் சிரமத்தை எதரிகொண்டு வருகின்றனர்.
அத்தோடு, இந்த பேருந்து தரிப்பு நிலையத்தில் பேருந்திற்காக காத்திருக்கும் பிரயாணிகள் சுட்டெரிக்கும் வெய்யிலில் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பேருந்து தரிப்பு நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடத்தின் மேற் கூரைக்கு பிளாஸ்ரிக் கண்ணாடியிலான கூரை உடைந்து முற்று முழுதாக இல்லாமல் போயுள்ளது.
கோரிக்கை
இந்தநிலையில், சம்மந்தபட்ட திணைக்கள அதிகாரிகள் இதற்கு இதுவரையம் நடவடிக்கை எடுக்காது என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அத்தோடு, மக்களின் வரிபணத்தில் சம்பளமாக பெற்றுக் கொள்ளும் இந்த உத்தியோகத்தர்களே சம்மந்தப்பட்ட திணைக்களங்களே மக்களுக்கு சேவை செய்யாது யாருக்காக வேலை செய்கின்றனர் என கடும் விசனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதனை கருத்தில் கொண்டு உடன் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



