14 பந்துகளில் அரைசதம்! பெங்களூரு வீரர் அதிரடி ஆட்டம்
ஐபிஎல் தொடரின் 52ஆவது போட்டியில் பெங்களூரு அணியின் சகலதுறை வீரர் ரொமாரியோ ஷெப்பர்ட் 14 பந்துகளில் அரைசதம் கடந்து சாதனைப்படைத்துள்ளார்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய போட்டியில் அவர் இந்த இலக்கை தனதாக்கினார்.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
பெங்களூரு அணி
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கட்டுக்களை இழந்து 214 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்த போட்டியில் பெங்களூரு அணி சார்பில் அதிகபட்சமாக பெத்தேல் 33 பந்தில் 55 ஓட்டங்களையும், மறுமுனையில் விராட் கோலி 29 பந்தில் அரைசதம் 33 பந்தில் 62 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
