நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் போராட்டக்காரர்களால் எரித்து தீக்கிரை: தொடரும் பதற்றம் (PHOTOS)
நாட்டில் இன்று ஏற்பட்ட குழப்பநிலையை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அவர்களது அலுவலகங்கள் அனைத்தும் மக்களினால் முற்றுகையிடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
ரோஹித அபேகுணவர்தன
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தவின் களுத்துறை அலுவலகம் எரித்து தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களால் அவரது அலுவலகம் முற்றுகையிடப்பட்டு இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது அங்கிருந்த பொருட்களையும் போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நிமல் லான்சா மற்றும் காஞ்சன விஜேசேகர
நிமல் லான்சா மற்றும் காஞ்சன விஜேசேகர வீடுகள் தீக்கிறை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முன்னாள் அமைச்சர் நிமல் லான்சாவின் நீர்கொழும்பில் உள்ள வீடும் போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களால் அவரது அலுவலகம் முற்றுகையிடப்பட்டு இவ்வாறு தீக்கிறையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது அங்கிருந்த பொருட்களையும் போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் காஞ்சன விஜேசேகரவின் மாத்தறையில் அமைந்துள்ள வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.