கோவிலுக்கு சென்ற தமிழர்களை உயிருடன் எரித்த ஜே.வி.பி : ரோஹித பகிரங்கம்
1983 ஆம் ஆண்டு ஜே.வி.பி கலவரத்தின்போது கொழும்பு புறநகர் பகுதிகளில் இந்துக்களின் முக்கியமான தினம் ஒன்றில் கோவிலுக்கு சென்று திரும்பிய தமிழர்கள் எரிக்கப்பட்டதுடன் அவர்களுடைய வாகனங்களும் எரிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் இன்றையதினம் (21.11.2023) உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
1971 ஆம் ஆண்டில் இந்த நாட்டில் இருக்கும் அனைத்து விடயங்களையும் அழித்து உயிர்களை அழித்து நாட்டின் பொறுப்பு வாய்ந்த நபர்களைக் கொன்று நாட்டை மூடி ஜே.வி.பியினர் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தினார். ஜேவிபியே இதற்கு பொறுப்பு சொல்ல வேண்டும்.
1983 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு வாழ் தமிழர்கள். தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் சகோதரத்துவம் காணப்பட்டது. ஆச்சரியப்படும் வகையிலான பிணைப்பு காணப்பட்டது.
மானுட பண்புகளுடன் தமிழர்கள் வாழ்ந்தார்கள். ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? 13 இராணுவ படை வீரர்கள் உயிரிழந்த போது அவர்களின் சடலங்கள் ரத்மலானை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது, பின்னர் அந்த சடலங்கள் பொரளை மயானத்தில் இரவில் அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
போர் செய்வதற்கு ஒத்துழைப்பு
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனை இதனை செய்தார். இதன் போது மக்கள் ஆத்திரப்பட்டனர். இதன் காரணமாக இலங்கை முழுவதும் வாழ்ந்து வந்த அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இதனால் அந்த மனிதர்களுக்கும் எமக்கு இடையில் ஒரு குரோதம் உருவாக்கப்பட்டது. வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு போர் செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. இதோ இருக்கின்றார் முன்னாள் இராணுவ தளபதி அவருக்கு இது பற்றி நன்றாக தெரியும்.
ஒட்டுமொத்த நாட்டையும் ரத்த வெள்ளமாக மாற்றினார்கள். அன்றும் பொருளாதாரம் உடைக்கப்பட்டது நாடு மூடப்பட்டது. 83 ஆம் ஆண்டிலும் நாடு முடக்கப்பட்டது பின்னர் 88, 89 மீண்டும் மக்கள் விடுதலை முன்னணியினர் இந்த நாட்டின் பொருளாதாரத்தை உடைத்தது 88, 89 ஆம் ஆண்டிலாகும்.
இவர்கள் என்ன செய்தார்கள் நெல் களஞ்சியத்தை எரித்தார்கள். பேருந்துகளை எரித்தார்கள் தொடருந்து தண்டவாளங்களை அகற்றினார்கள். அனைத்து விடயங்களின் மூலமும் ஜே.வி.பி நாட்டின் பொருளாதாரத்தை உடைத்தது.
மிக மோசமான சந்தர்ப்பம்
இந்த பாதிப்புகள் தொடர்பில் சரியான மதிப்பீடுகளை செய்தால் இங்கு இருக்கின்ற தூய்மையானவர்களின் கரங்களில் படிந்துள்ள கரையை கண்டு கொள்ளலாம்.
ஒட்டுமொத்த நாட்டையும் அழித்தார்கள் அவையும் சேர்க்கப்பட வேண்டும் பொருளாதார கொலையாளிகள் எனக் கூறப்படும் பெயர் பட்டியலில் இவர்களின் பெயர்களும் இணைக்கப்பட வேண்டும்.
இன்று குற்றமற்றவர்கள் போல் ஜேவிபியினர் ரகசியமாக கூட பாவங்கள் இழைக்கவில்லை என்ற வகையில் இருக்கின்றார்கள். அவ்வளவு தூய்மையானவர்கள் என்ன செய்தார்கள்? 1971 ஆம் ஆண்டு இந்த நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்தனர் இதுதான் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்த மிக மோசமான சந்தர்ப்பம்.
அதன் பின்னரே 1977 ஆம் ஆண்டு ஜே ஆர் ஜெயவர்த்தன ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார். என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
You may like this





சுவிட்சர்லாந்தில் 2 இந்தியர்களின் எதிர்பாராத சந்திப்பு: இணையத்தில் வைரலாகும் அழகிய தருணம்! News Lankasri

கிளைமேக்ஸ் மற்றும் அந்த 20 நிமிடம், ரஜினியின் கூலி படம் பற்றி வந்த முதல் விமர்சனம்... மாஸ் போங்க Cineulagam
