மூன்றாவது போட்டியிலும் சோபிக்க தவறிய ரோஹிட் மற்றும் கோஹ்லி
சுற்றுலா நியூஸிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியானதுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டியிலும் இந்திய வீரர்களான ரோஹிட் சர்மா மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் சோபிக்க தவறியுள்ளனர்.
குறித்த போட்டி நேற்று (01.11.2024) மும்பை வாண்கடே மைதானத்தில் ஆரம்பமானது.
முதல் நாள் ஆட்ட முடிவின் போது, இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில் 4 விக்கட் இழப்புக்கு 64 ஓட்டங்களை பெற்றிருந்தது.
தொடரை கைப்பற்றிய நியூஸிலாந்து
இதில் ரோஹிட் சர்மா 18 ஓட்டங்களையும், விராட் கோஹ்லி 4 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.
முன்னதாக, நியூஸிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் 235 ஓட்டங்களை பெற்றது இதில் டேர்ல் மிச்செய்ல் 82 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இந்தநிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ள இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam
