கொழும்பில் நிகழ்த்தப்படும் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களின் பின்னணியில் தமிழ் அரசியல்வாதி
கொழும்பில் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்களுக்கு ஆயுதங்கள் வழங்கி வரும் தமிழ் அரசியல்வாதி ஒருவர் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ரோஹான் ஓலுகல தெரிவித்துள்ளார்.
சிரேஷ் பொலிஸ் அதிகாரிகள் மூவர் இணைந்து நடத்திய கலந்துரையாடல் ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்
மேலும் தெரிவிக்கையில், குறித்த தமிழ் அரசியல்வாதியின் பெயர் மற்றும் அரசியல் கட்சி தொடர்பில் தெரிவிக்க முடியாது.
விசாரணைகள் நடைபெற்று வருவதால் அது வெளிப்படுத்த முடியாது. கடந்த ஜூலை 21 ஆம் திகதியன்று கிரிபத்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒரு சந்தேகநபரால் தெரிவிக்கப்பட்ட தகவலுக்கமைய, டி56 ரக துப்பாக்கி, 30 தோட்டாக்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையின்போது பெறப்பட்ட தகவல்களுக்கமைய வவுனியா செட்டிக்குளம் பகுதியில் 86 குண்டுகள் மற்றும் பெரும் தொகை ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
இவை கொழும்புக்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தவையாகும். நாங்கள் மேற்கொண்ட விசாரணைகளில் வவுனியாவில் தமிழ் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர் என அறியப்பட்டுள்ளது.
அவரும் பெரும் அரசியல்வாதிகளுடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் பல தகவல்கள் தெரிவிக்க முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 23 மணி நேரம் முன்

Ethirneechal: தடபுடலாக நடக்கும் தர்ஷன் கல்யாணம்.. பதற்றத்தில் அறிவுக்கரசி- பொண்ணு யார் தெரியுமா? Manithan

லண்டனில் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: பொலிஸார் முகத்தில் குத்திய போராட்டக்காரர்கள்! News Lankasri
