ராபர்ட் பயஸின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு: வெளியாகியுள்ள தகவல்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட ராபர்ட் பயஸின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் 7 நாட்களாக ராபர்ட் பயஸ் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் அதிகாரிகளின் வாக்குறுதிக்கமைய நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சிறப்பு முகாம்
ராபர்ட் பயஸ் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால் தொடர்ந்தும் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ராபர்ட் பயஸ் சிறப்பு முகாமிலிருந்து தன்னை விடுதலை செய்து விரும்பும் வெளிநாட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், கடவுச்சீட்டு எடுப்பது தொடர்பாக தன்னை இலங்கை துணைத் தூதரகத்திற்கு அழைத்து செல்ல வேண்டும், சிறப்பு முகாமில் தங்களுக்கு மட்டும் தொடரும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான தனிமைச் சிறைவாசம் முடிவுக்கு வர வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 31ஆம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டிருந்தார்.

7 நாட்களாக போராட்டம் தொடர்ந்து வந்த நிலையில் வட்டார சிறப்பு துணை ஆட்சியர் மற்றும் துணை காவல் ஆணையர் ஆகியோர் நேரடியாக சிறப்பு முகாமுக்கு வருகை தந்து கோரிக்கைகளை கேட்டறிந்து நடைபயிற்சி உள்ளிட்ட முகாம் சார்ந்த கோரிக்கைகளை உடனடியாக ஏற்பதாகவும், ஒரு வாரத்தில் இலங்கை துணைத் தூதகரத்திற்கு அழைத்து செல்வதாகவும் வாக்குறுதி கொடுத்துள்ளனர்.
தற்காலிகமாக போராட்டம் நிறைவு
இதனை ராபர்ட் பயஸ் தற்காலிகமாக தனது உண்ணாநிலைப் போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, ஒருவாரத்தில் இலங்கை துணைத் தூதரகத்திற்கு அழைத்து செல்வதாக கொடுக்கப்பட்ட வாக்குறுதியினை நிறைவேற்றாத பட்சத்தில் மீண்டும் தனது உண்ணாநிலை போராட்டத்தை தொடரப் போவதாகவும் ராபர்ட் பயஸ் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இலங்கை அருகே... ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கியால் தாக்குதல் நடத்தியதை அறிவித்த அமெரிக்கா News Lankasri
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri