தியானத்தில் இருந்த பௌத்த தேரருக்கு நேர்ந்த கதி
அம்பாறை - பொத்துவில் பகுதியில் அமைந்துள்ள மகா விகாரையின் பௌத்த தேரர் ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்து பணம் மற்றும் தொலைபேசியை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இவ்வாறு கொள்ளையிட்டுச் சென்றதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் சிலரை பொத்துவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட எட்டுச் சந்தேக நபர்களும் பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் 34, 40, 39, 34, 38, 43 மற்றும் 56 வயதுடையவர்களாவர்.
குகை ஒன்றில் தியானம்
பொத்துவில் - முஹுது மகா விகாரையின் காட்டுப் பகுதியில் உள்ள பாறைக் குகை ஒன்றில் தியானம் செய்து கொண்டிருந்தபோதே தேரரிடமிருந்து 57,000 ரூபா பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களால் கொள்ளையிடப்பட்ட கைத்தொலைபேசி மற்றும் பணத்தை கைப்பற்றிய பொத்துவில் பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
