கொழும்பில் எரிபொருள் நிலையத்தில் கொள்ளை! சிசிரிவி கமராவில் பதிவான காட்சி
கொழும்பு-கொள்ளுபிட்டி பவுசர் வீதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் இருந்து 71,000 ரூபா பணத்தை கொள்ளையடித்து சென்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் வருகைதந்த இருவர் அங்கு எரிபொருள் இயந்திரத்திற்கு அருகில் இருந்த பணப் பெட்டகத்தில் இருந்து பணத்தை கொள்ளை அடித்துள்ளனர்.
சிசிரிவி கமரா காட்சி

சிசிரிவி கமரா காட்சிகளின் ஊடாக மோட்டார் சைக்கிளின் பதிவு இலக்கத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு 10 இல் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை சந்தேகநபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள், கொள்ளையடித்த பணத்தில் 45,000 ரூபாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
நீதிமன்ற நடவடிக்கை

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்பவர் எனவும் மற்றையவர் மோட்டார் சைக்கிள் பழுதுபார்ப்பவர் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும் சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
You may like this video
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 14 மணி நேரம் முன்
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan