லண்டனில் தமிழ் குடும்பத்தின் வீட்டில் நடந்த பெரும் கொள்ளை! அவதானமாக இருக்குமாறு அறிவுருத்தல்(Video)
லண்டனில் தமிழ் குடும்பத்தின் வீட்டில் பெரும் கொள்ளை சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த வீட்டில் கொள்ளையடித்த கொள்ளையர்கள், தாம் கொள்ளையடிக்கும் காட்சிகளை காணொளியாக பதிவு செய்து வெளியிட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
கொள்ளையர்கள், நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்கும் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.
இருப்பினும் அந்த காணொளி தொடர்பிலோ கொள்ளை சம்பவம் தொடர்பிலோ மேலதிகமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
குறித்த காணொளியில் பெருந்தொகை பணம், பெருமளவிலான நகை என்பன கொள்ளையடிக்கப்படுவது பதிவாகியுள்ளது.
பணம் மற்றும் நகைகளை பாதுகாப்பாக வைத்தும் அதனை சாதாரணமாக கொள்ளையர்கள் கொள்ளையடிக்கின்றனர்.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையில் இவ்வாறான கொள்ளை சம்பவங்கள் அதிகரிக்கின்றன.
எனவே பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே மேற்கண்ட காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் அறிவுறுத்தி வருவதோடு, மக்களை அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 10 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
