ஹட்டனில் ஒரே கட்டிடத்தில் தொடரும் கொள்ளை- நகை உற்பத்திப் பட்டறைகள் இலக்கு
ஹட்டன் நகரிலுள்ள கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இயங்கி வரும் நகை உற்பத்திப் பட்டறையில் நேற்று (21.11.2026) கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பட்டறைக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர், பூட்டுகளை உடைத்து அங்கிருந்த நகைகள் மற்றும் பணத்தைத் திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கட்டிடத்தின் கீழ் மாடியில் இயங்கிய தையல் நிலையம் ஒன்றை உடைத்து, அங்கிருந்த தையல் இயந்திரம் மற்றும் இரண்டு வெற்றுப் பெட்டிகளை ஒன்றின் மீது ஒன்றாக வைத்து, சேலை ஒன்றின் உதவியுடன் சந்தேகநபர் மூன்றாவது மாடிக்குச் சென்றுள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஹட்டன் பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விசாரணை
இதே கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இயங்கிய இரண்டு பட்டறைகள் கடந்த மாதமும் இதே முறையில் உடைக்கப்பட்டு, அங்கிருந்த பணம் மற்றும் சில நகைகள் திருடப்பட்டிருந்தன.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரைக் கைது செய்வதற்காக ஹட்டன் பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.















42 ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தவருக்கு மறுக்கப்பட்ட குடியுரிமை - இறுதியாக 76 வயதில்... News Lankasri