2028 ஆம் ஆண்டு முதல் வாகன புகை வெளியேற்ற சோதனையில் ஏற்படவுள்ள மாற்றம்
2028 ஆம் ஆண்டு முதல் அனைத்து வாகனங்களுக்கும் தற்போதைய புகை சோதனைக்குப் பதிலாக 'விரிவான சாலை தகுதி சான்றிதழை' (Road Fitness Certificate) அறிமுகப்படுத்த மோட்டார் வாகனப்போக்குவரத்துத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகனப்புகை வெளியேற்ற சோதனைப்பிரிவின் பணிப்பாளர் தசுன் கமகே இதனை தெரிவித்துள்ளார்.
300 தகுதிவாய்ந்த பணியாளர்கள் ஆட்சேர்ப்பு
இந்த புதிய அமைப்பு வாகனப்புகை வெளியேற்றத்தை மட்டுமல்லாமல், பிரேக்கிங் அமைப்புகள், முகப்பு விளக்குகள், டயர்கள் மற்றும் பிற தொழில்நுட்ப நிலைகள் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு கூறுகளையும் மதிப்பிடும் என்று கூறியுள்ளார்.
திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், பாடசாலைப் போக்குவரத்து வாகனங்கள், அலுவலகப் போக்குவரத்து வான்கள் மற்றும் சிறப்பு சுற்றுப்பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் பேருந்துகள் ஆகியவற்றை உள்ளடக்கும் வகையில் சோதனை விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தை செயல்படுத்த தேவையான சுமார் 300 தகுதிவாய்ந்த பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை இத்துறை ஏற்கனவே ஆட்சேர்ப்பு செய்ய தொடங்கியுள்ளது.