டிட்வாவால் நுவரெலியா மாவட்டத்தில் 187 இடங்களில் வீதி உடைப்பு
டிட்வா சூறாவலியால் ஏனைய மாவட்டங்களை விட நுவரெலியா மாவட்டம் மண்சரிவு, தாழ்இறக்கம் காரணமாக மிகப்பெரிய அழிவினை சந்தித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுரவீர தெரிவித்துள்ளார்.
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
பாரியளவு நிதி
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், "நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதிகளில் 187 இடங்களில் உடைந்து போய் சேதமடைந்துள்ளன.
அதனை புனரமைக்க 24 பில்லியன் ருபா தேவைப்படும். நாட்டில் சேதமடைந்த வீதிகளை புனரமைப்பதற்கு 76 பில்லியன் ரூபா தேவைப்படும்.
நுவரெலியா மாவட்டத்திலே அதிக பணம் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.