வவுனியாவில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட வீதி போக்குவரத்து மறுசீரமைப்பு
வவுனியா(Vavuniya) நகரப் பகுதியில் போக்குவரத்து பொலிஸாரால் வீதி போக்குவரத்து நடவடிக்கைகள் மறு சீரமைக்கப்பட்டுள்ளன.
வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் போக்குவரத்து பொலிஸாரால் இன்று (30.04.2024) குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முன்னெடுக்கப்பட்ட மறுசீரமைப்பு
வவுனியா நகரில் அதிக மக்கள் நடமாட்டம் மிக்க பகுதிகளான பசார் வீதியில் இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், பசார் வீதியில் இருந்து பள்ளிவாசல் சந்தி நோக்கி செல்லும் போது 0,2,4,6,8 ஆகிய திகதிகளில் பசார் வீதியின் வலது புறமாகவும், 1,3,5,7,9 ஆகிய திகதிகளில் வீதியின் இடது புறமாகவும் வாகனங்களை நிறுத்துவதற்கு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரகாலப் பகுதியில் இதன் முன்னேற்றம் குறித்து அறிந்த பின் ஏனைய நகர வீதிகளையும் மறு சீரமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
[PLGZKJE ]
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |