முச்சக்கரவண்டிகளில் சாகசம் காட்டிய இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் ஹட்டன் மல்லியப்பு பகுதியில் முச்சக்கரவண்டிகளை ஒற்றைச்சக்கரத்தில் செலுத்தி சாகசம் காட்டிய இரு இளைஞர்கள் ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளால் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹட்டன் மல்லியப்பு பகுதியில் இளைஞர்கள் குழுவொன்று ஆபத்தான முறையில் முச்சக்கர வண்டிகளை செலுத்தி அதனை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
இந்த காணொளியின் அடிப்படையில் இரு முச்சக்கரவண்டிகளின் பதிவு எண்கள் மூலம் விசாரணை நடத்தி சந்தேகத்தின் பேரில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் 20-30 வயதுடைய ஹட்டன் பகுதியில் வசிப்பவர்கள் எனவும்,நீண்ட விசாரணைகளின் பின்னர் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கர வண்டிகளை ஆபத்தான முறையில் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர்களுக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ரஷ்ய எண்ணெய் விவகாரம்... அமெரிக்காவை அடுத்து இந்தியாவிற்கு எதிராக திரும்பும் ஐரோப்பிய நாடுகள் News Lankasri
