கனகரக வாகனங்களால் பாழடையும் வீதி : பொதுமக்கள் விசனம் (Photos)
வவுனியா பூந்தோட்டம் பெரியார்குளம் உள்வீதிகள் கனரக வாகனங்கள் பயணிப்பதால் சேதமடைந்து வருவதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவதாக கிராம மக்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.
வவுனியா சாந்தசோலையில் இருந்து பூந்தோட்டம் பாடசாலை வரையான வீதி காப்பற் இட்டு புனரமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.
குறித்த புனரமைப்பு பணிக்காக கொண்டு செல்லப்படும் கிரவல் மற்றும் ஏனைய பொருட்கள் கனரக வாகனங்களினூடாக பெரியார்குளம் மற்றும் பூந்தோட்டம் உள்வீதிகளூடாக கொண்டு செல்லப்படுகின்றது.
இதனால் சிறிய வீதிகளாக காணப்படும் அவை சேதமடைந்து வருவதுடன்,சில சமயங்களில் வாகன நெரிசலான நிலமை ஏற்படுவதாகவும் கிராமமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வீதி அபிவிருத்தி பணிகளை தாம் வரவேற்றப்பதாக தெரிவிக்கும் கிராமமக்கள் குறித்த வீதி புணரமைப்பு பணிகள் நிறைவுபெறும் போது பெரியார்குளம் உள் வீதிகள் குன்றும் குழியுமாக மாறிவிடும் என்று அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே சிறுவீதிகளூடாக கனரக வாகனங்கள் பயணிப்பதை தவிர்த்து மாற்று ஏற்பாடுகளை செய்வதற்கு உரிய திணைக்களங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.







