யாழ். மாவட்டத்திற்கான வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு
போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானங்கள் சேவைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முதற்கட்ட புனரமைப்பு வேலைகள் நேற்றையதினம் (21.06.2025) தெல்லிப்பளை காங்கேசன்துறை கல்லூரி வீதியின் புனரமைப்பு மற்றும் பருத்தித்துறை மூன்றாம் வீதியின் புனரமைப்பு வேலைகளுடன் ஆரம்பமாகியது.
அந்த வகையில் காங்கேசன்துறை கல்லூரி வீதியின் புனரமைப்பு பணியின் ஆரம்ப நிகழ்வு கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரின் தலைமையில் ஆரம்பமாகியது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஜீவநாதன், அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வடமாகாண பணிப்பாளர் குரூஸ், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






ஈரானின் எச்சரிக்கை., B-2 பாம்பர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா - புதிய கட்டத்திற்கு செல்லும் மோதல் News Lankasri

மகனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்னுடன் காதல் - வருங்கால மருமகளை திருமணம் செய்யும் மாமனார் News Lankasri
