நெளுக்குளம் - செட்டிகுளம் வீதியை பயன்படுத்துவோருக்கான அவசர அறிவித்தல்
வவுனியா, நெளுக்குளம் - செட்டிகுளம் பிரதான வீதியான இன்று (25.11) இரவு 9 மணி தொடக்கம் நாளை (26.11) அதிகாலை 5 மணிவரை மூடப்படும் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வவுனியாவில் தொடர்ந்தும் பெய்து வரும் மழை காரணமாக பாவற்குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து உள்ளமையால் இன்று (25.11) இரவு அதன் வான்கதவுகள் மேலும் ஆழத்திற்கு திறக்கப்படவுள்ளது.
இதன்காரணமக நெளுக்குளம் - செட்டிகுளம் வீதியில் நீர்வரத்து அதிகரித்து வீதியில் பயணிக்க முடியாத நிலை ஏற்படும்.
இதனால் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குறித்த வீதியானது இரவு 9 மணியில் இருந்து நாளை அதிகாலை 5 மணிவரை மூடப்பட்டிருக்கும்.
எனவே பொதுமக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 5 நிமிடங்கள் முன்

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam

Puzzle iq test: படத்தில் உள்ள காதல் ஜோடிகளில் யார் ஏலியன்? 5 விநாடிகளில் பதிலை கண்டுபிடிங்க Manithan
