விபத்தால் ஏற்பட்ட பதற்றம் - கொடூரமாக தாக்கப்பட்ட சாரதி
பண்டாரகம - ஹொரண வீதியின் கொத்தலாவல சந்தியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதினால் பதற்றமான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
விபத்தையடுத்து மோட்டார் சைக்கிளில் பயணித்தவர், காரின் சாரதியை மிகக் கொடூரமான முறையில் தாக்கியதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்கப்பட்ட கார் ஓட்டுநர் வீதியில் மயங்கி விழுந்துள்ளார்.

அத்துடன் விடாத மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் அந்த காரை பலத்த சேதப்படுத்தியுள்ளார்.
தாக்குதல் சம்பவம்
பின்னர் அந்த பகுதியில் இருந்த மக்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரிடம் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வார்த்தைகளை பரிமாறிக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் அவரது கர்ப்பிணி மனைவியுடன் பண்டாரகம பகுதியிலிருந்து ஹொரணை நோக்கி சென்று கொண்டிருந்த போது, குறுக்கு வீதியில் இருந்து பிரதான வீதிக்கு திருப்பிய கார் மீது மோதி மோட்டார் சைக்கிள் கவிழ்ந்துள்ளது.
இதனால் கோபமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் இவ்வாறு தாக்குதல் நடத்தியதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri