நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட வீதி விபத்துக்கள் (Photos)

Death Investigation Police Accident Hospital Today
By Independent Writer Jan 14, 2022 08:41 AM GMT
Report

வவுனியா

வவுனியா ஏ9 வீதி பூனாவை பகுதியில் அதிசொகுசு பேருந்து உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 12 பயணிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து சம்பவம் இன்று (14) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

பூனாவை பகுதியில் வீதியின் அருகே விபத்துக்குள்ளான டிப்பர் வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன்போது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்து ஒன்று டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானதுடன், குறித்த விபத்துக்குள்ளான பேருந்துடன் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பிறிதொரு அதிசொகுசு பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்து சம்பவத்தில் பேருந்தில் பயணித்த 12 பயணிகள் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து காரணமாக ஏ9 வீதியூடான போக்குவரத்து சுமார் 1 மணிநேரம் வரை ஸ்தம்பித்ததுடன் விபத்துச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட வீதி விபத்துக்கள் (Photos) | Road Accidents

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட வீதி விபத்துக்கள் (Photos) | Road Accidents

செய்திகள் : திலீபன் 

மன்னார்

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பிரதான வீதி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து சம்பவம் நேற்று (13) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மன்னார் பேசாலை பகுதியில் இருந்து மீன்களை ஏற்றிக் கொண்டு வந்த கூலர் ரக வாகனம் ஒன்றும் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. மன்னார் பொது விளையாட்டு மைதான வீதி ஊடாக வைத்தியசாலை சந்தியை நோக்கி பயணித்த குறித்த வாகனம் வைத்திய சாலை சுற்றுவட்ட பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள கடைகளில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் சாரதி மற்றும் நடத்துனர் பலத்த காயங்களுடன் இப்பகுதியில் ஒன்று கூடியவர்களினால் மீட்கப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட வீதி விபத்துக்கள் (Photos) | Road Accidents

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட வீதி விபத்துக்கள் (Photos) | Road Accidents

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட வீதி விபத்துக்கள் (Photos) | Road Accidents

செய்திகள் ஆஷிக்

திருகோணமலை

திருகோணமலை கிண்ணியா தள வைத்தியசாலைக்கு முன்னால் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ் விபத்து நேற்று (13 ) பிற்பகல் 1.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த வயோதிபர் படுகாயம் அடைந்த நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த வயோதிபருடன் பயணித்த 24 வயதுடைய மற்றுமொருவரும், விபத்துக்குள்ளான காரின் சாரதியான பிரபல சட்டத்தரணியும் படுகாயமடைந்த நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகள் : பதுர்தீன் சியானா

மட்டக்களப்பு

மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் ஓட்டமாவடி நாவலடி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து வாகனம் ஒன்று தடம் புறன்டுள்ளதாக வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாழைச்சேனையில் இருந்து பொலநறுவை, கதுருவெல பகுதியை நோக்கி இன்று (14) காலை பயணித்த எல்ப் ரக வாகனம் ஓட்டமாவடி நாவலடி பிரதேசத்தில் வீதியை குறுக்கறுத்த யானையை கண்டு தடுமாற்றத்தில் இவ் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனத்தில் பயணித்த பொலநறுவை – கதுறுவெல முஸ்லீம் கொலனி பிரதேசத்தை சேர்ந்த 23 மற்றும் 33 வயதுடைய நபர்கள் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து தொடர்பான விசாரனைளகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகள் : நவோஜ்

மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US