திருகோணமலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் படுகாயம்
திருகோணமலை பகுதியில் சிவனொளிபாத மலைக்குச் சென்று வீடு திரும்பிய வாகனம் விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
குறித்த விபத்து கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 93 ம் கட்டைப் பகுதியில் இன்று (11.2.2024) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகனம் தொலை தொடர்பு கம்பம் ஒன்றிலே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், விபத்துக்குள்ளான வாகனம் சிவனொளிபாத மலைக்கு சென்று வீடு திரும்பி போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், காயங்களுக்குள்ளானோர் கந்தளாய் 94 ம் கட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா





கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam
