2026ஆம் ஆண்டில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் பதிவு
2026ஆம் ஆண்டில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி சுமார் 1605 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு இயக்குநரகத்தின் பொறுப்பு டி.ஐ.ஜி. டபிள்யூ.பி.ஜே. சேனதீரா தெரிவித்துள்ளார்.
இன்று (13.08.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
விபத்துக்களில் உயிரிழப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த விபத்துக்களில் 1693 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 555 பாதசாரிகள், 603 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், 119 பின்னால் அமர்ந்து பயணித்தவர்கள், 115 சைக்கிள் ஓட்டுநர்கள், 136 ஓட்டுநர்கள் மற்றும் 162 பயணிகள் அடங்குகின்றனர்.

வீதி விபத்துகளில் சற்று குறைவு
மேலும், இதுவரை 3125 கடுமையான விபத்துகள், 6477 சிறிய விபத்துகள் மற்றும் 2388 இழப்பு விபத்துகள் பதிவாகியுள்ளன.
இருப்பினும், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது வீதி விபத்துகளில் சற்று குறைவு காணப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam