யாழ். மானிப்பாய் பகுதியில் கோர விபத்து
யாழில் இடம்பெற்ற வீதி விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் (Jaffna Teaching Hospital ) அனுமதிக்கபட்டுள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் இன்று (23.4.2024) மதியம் யாழ். மானிப்பாய் (Manipay) - காரைநகர் பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த 20 வயதான அஜிந்தன் எனும் இளைஞனே படுகாயமடைந்துள்ளார்.
பொலிஸார் மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மானிப்பாய் - காரைநகர் பிரதான வீதியில் அமைந்துள்ள அரைக்கும் ஆலையில் இருந்து பிரதான வீதியில் முச்சக்கர வண்டி பயணிக்க தொடங்கிய நிலையில், பின்புறமாக வந்த பட்டாரக வாகனம் மோதியுள்ளது.
இதன்போது முச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்துள்ளதுடன், சாரதியான 20 வயதான அஜிந்தன் எனும் இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.
இதேவேளை, பட்டாரக வாகனம் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின்கம்பத்துடன் மோதி பகுதியளவில் சேதமடைந்த நிலையில் வாகன சாரதி காயங்களின்றி மீட்கபட்டார்.
யாழ்.மாவட்ட போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam

ரூ.30,000 கோடி மதிப்புள்ள சோனா குழுமம்: கொலை செய்யப்பட்டாரா சஞ்சய் கபூர்? கடிதத்தால் வெடித்த சர்ச்சை! News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam
