கிளிநொச்சி வீதி விபத்தில் இளைஞர் பலியான சோகம் (Photos)
கிளிநொச்சியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இன்றைய தினம் (09.05.2023) அதிகாலை இடம்பெற்ற விபத்தில், புளியம்பக்கடை பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் விபத்து
உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி- பரந்தன் முல்லைதீவு ஏ 35 வீதியில் புளியம் பொக்கணை சந்தியை அண்மித்த பகுதியில் மோட்டார் சைக்கிள் மாட்டுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இச் சம்பவத்தில் இரண்டு கால்நடைகளும் இறந்துள்ளன.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.