திருக்கோவிலில் வீதி விபத்து: 25 வயது இளைஞன் உயிரிழப்பு...!
அம்பாறை - திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியின் தங்கவேலாயுதபுரம் சந்தியில் லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் (1) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் லொறி சாரதி கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணிக்கபிள்ளையார் வீதி விநாயகபுரம் 4ஆம் பிரிவைச்சேர்ந்த 25 வயதுடைய திருச்செல்வம் கிருஷன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரேதப் பரிசோதனை
பொத்துவில் பகுதியிலிருந்து தீரக்கோவிலை நோக்கி லொறி ஒன்று பயணித்துள்ளது. அதேசமயம் திருக்கோவிலிருந்து தங்கவேலாயுதபுரம் நோக்கி மோட்டார் சைக்கிள் ஒன்றும் சென்றுள்ளது.
அப்போது தங்கவேலாயுதபுரம் சந்தியில் லொறியும் மோட்டர்சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞன் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகத் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன் லொறி சாரதியைக் கைது செய்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைத் திருக்கோவில் போக்குவரத்து பொலிஸார்
மேற்கொண்டுவருகின்றனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
