வீதி விபத்துக்களுக்கான பிரதான காரணத்தை வெளியிட்ட விசேட வைத்தியர்
நாட்டில் இடம்பெறும் பல்வேறு வீதி விபத்துக்களுக்கு வாகனங்களை முறையாகப் பராமரிக்காததே காரணம் என விசேட வைத்தியர் சமித சிறிதுங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தற்போதைய பொருளாதார சூழ்நிலை காரணமாக, மக்கள் தங்கள் வாகனங்களை முறையாக பராமரிப்பதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "வாகனங்களில் ஏற்படும் பிரச்சனைகள் பெரும்பாலும் விபத்துகளுக்கு காரணமாக இருக்கலாம், மேலும் விபத்தின் தீவிரத்தை அதிகரிக்கவும் கூடும்.
சரியான பராமரிப்பு
தற்போதைய பொருளாதார நிலைமைகளால், சிலர் தமது வாகனங்களை முறையாகப் பராமரித்து, க்ளீன் செய்யும் செயற்பாட்டை தாமதப்படுத்த முயற்சிக்கின்றனர்.
எனவே, சில நேரங்களில் வீதியில் உள்ள வாகனங்கள் சரியான பராமரிப்பு இல்லாமல் பயன்படுத்தப்படுகின்றன.
4 ரயர்களையும் மாற்ற வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் ரயர்களை மாற்றுவதில் தாமதம் ஏற்படுகிறது. ஆனால் ரயர்களின் தரம் முக்கியமானது. வேகத்தை கட்டுப்படுத்த அது பாரிய பங்களிப்பை வழங்குகிறது.
போக்குவரத்து விதி
சில தருணங்களில் வாகனங்கள் நழுவிச் செல்வதற்கும் இவ்வாறான ரயர்களே காரணம். சில நேரம் பயணம் செய்யும் போது அது வெடிக்கக்கூடும்.
இந்த வகையான விபத்து பல்வேறு காரணங்களுக்காக ஏற்படலாம். போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிப்பதன் மூலமும், முறையாகப் பராமரிக்கப்படும் வாகனத்தை ஓட்டுவதன் மூலமும், பல விபத்துகளைக் குறைக்கலாம் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
