கம்பளை - நுவரெலியா பிரதான வீதியில் ஒரு வழி போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி
கம்பளை - நுவரெலியா பிரதான வீதியில் அட்டபாகை எனும் இடத்தில் 2 மாடி வர்த்தக நிலையமொன்று இடிந்து விழுந்து முற்றாக சேதமடைந்துள்ளது.
இந்த நிலையில் அப்பகுதி தாழிறங்கும் அபாயம் இருப்பதால் ஒரு வழி போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கம்பளை நகரிலிருந்து சுமார் 5 கிலோ மீற்றர் தொலைவிலேயே இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையில் நேற்றிரவு மேற்படி வர்த்தக நிலையம் முற்றாக சரிந்து விழுந்துள்ளது. இவ் அனர்த்தத்தில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.