இலங்கையில் தீவிரவாத தாக்குதல்களின் அபாயம் குறைந்துள்ளது! - பிரித்தானியா அறிவிப்பு
பிரித்தானியா, தமது அண்மைய பயண ஆலோசனையில், இலங்கையில் தீவிரவாத தாக்குதல்களின் அபாயத்தை குறைத்துக் காட்டியுள்ளது.
இலங்கையில் தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்த முயற்சிக்கும் ஆபத்து மிகக் குறைவு, குறைந்து வருகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்த முயற்சிக்கக்கூடும் என்று கடந்த 20ஆம் திகதியின் பயண ஆலோசனை குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விருந்தகங்கள், சுற்றுலா தளங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்ற வெளிநாட்டினர் பார்வையிடும் இடங்கள் உட்பட இடங்களில் தாக்குதல்கள் இருக்கக்கூடும் என்று அது கூறுகிறது.
பயணிகள் நெரிசலான பொது இடங்கள், பெரிய கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களைத் தவிர்க்கவும், உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
"ஈராக் மற்றும் சிரியாவில் மோதலால் குழுக்கள் அல்லது ஆட்கள், இங்கிலாந்து நலன்கள் மற்றும் பிரிதானிய பிரஜைகளுக்கு எதிராக உலகளவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தும் அச்சுறுத்தல் உள்ளது.
எனவே இந்த நேரத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும்
என்று இங்கிலாந்தின் வெளியுறவு அலுவலகம் கோரியுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 மணி நேரம் முன்

பிரித்தானிய அரச குடும்பத்தில் கோவிட் தடுப்பூசியால் புற்றுநோய்: அமெரிக்க மருத்துவரால் வெடித்த சர்ச்சை News Lankasri

தமிழகத்தில் முதல் நாளில் சிவகார்த்திகேயனின் மதராஸி படம் செய்த மொத்த வசூல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam
