டெங்கு மற்றும் சிக்குன்குனியா பரவும் அபாயம் தொடர்பில் எச்சரிக்கை
தற்போது பெய்து வரும் மழையால் டெங்கு மற்றும் சிக்குன்குனியா பரவும் அபாயம் அதிகம் இருப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், டெங்குவை பரப்பும் நுளம்புகள் மூலமாகவும் சிக்குன்குனியா பரவுகிறது. நீண்ட வார இறுதி விடுமுறை மற்றும் பாடசாலை விடுமுறை காரணமாக, பலர் சுற்றுலா சென்றுள்ளனர்.
சுற்றுச்சூழல் சுத்தப்படுத்தல்
இவர்கள் தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறத்தையும் சுத்தம் செய்யும் வாய்ப்பை இழந்துள்ளனர். இதன் காரணமாக, நுளம்புகள் பெருகும் இடங்களை சுத்தம் செய்யும் வாய்ப்பு காணப்படாததால், அவை அதிகரித்துள்ளன.

டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் ஒரே நுளம்பால் பரவுகின்றன. இதன் காரணமாக, சுற்றுப்புறத்தை தொடர்ந்து சுத்தம் செய்வதன் மூலம் நுளம்பு பெருக்கத்தைத் தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam