பொது போக்குவரத்தினால் மீண்டும் கோவிட் பரவும் ஆபாயம்
கோவிட் வைரஸ் பரவல் தீவிரம் அடைந்துள்ள பகுதிகளில் பொது போக்குவரத்தினை மேற்கொள்ள புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகளை அழைத்து செல்ல வேண்டும் என சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.எனினும் அவ்வாறு அந்த சட்டம் செயற்படுத்தப்படுவதில்லை என பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அளவிற்கு அதிகமான பயணிகளை அழைத்து செல்லும் போதிலும் அந்த பேருந்துகளில் அதிகரிக்கப்பட்ட நூற்றுக்கு 20 என்ற பஸ் கட்டணம் தொடர்ந்து அறவிடப்படுவதாக பேருந்து பயணிகளின் சங்கத்தின் ஏற்பட்டாளர் விமுக்தி துஸாந்த தெரிவித்துள்ளார்.
எனினும் தேவையான நேரங்களில் மாத்திரம் அளவுக்கு அதிகமாக பயணிகள் பேருந்துகளுக்குள் ஏற்றப்படுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆசனங்களின் எண்ணிக்கையை விடவும் அதிகமான பயணிகளை அழைத்து சென்ற 90 பேருந்துகளின் அனுமதி பத்திரம் இரத்து செய்யப்படுவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.




