அரச வைத்தியசாலைகள் ஸ்தம்பிக்கும் அபாயம்: வெளியான அதிர்ச்சி தகவல் - செய்திகளின் தொகுப்பு
அரசாங்க வைத்தியசாலைகளில் காணப்படும் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக சுமார் இரண்டு வாரங்களுக்கு போதுமான மருந்துகளே அந்த வைத்தியசாலைகளில் இருப்பதாக அரசாங்க மருந்தாளர் சங்கத்தின் தலைவர் அஜித் திலகரத்ன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் இரண்டு வாரங்களில் டொலர் நெருக்கடிக்குத் தீர்வு காணப்படாவிடின், அரசாங்க வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை விநியோகிக்க முடியாவிட்டால், அரச வைத்தியசாலைகளின் மருந்து விநியோகம் நிறுத்தப்படும் அபாயம் ஏற்படும் எனவும் திலகரத்ன கூறியுள்ளார்.
டொலர் தட்டுப்பாடு காரணமாக மருந்துகளை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், தனியார் மருந்தகங்களுக்கு மருந்துகளை வழங்குவதை கட்டுப்படுத்தியதால், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் தனியாரிடமிருந்தும் மருந்துகளை வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri