நெல்லை பதுக்கி வைக்கும் அபாயம் உள்ளதால் இலங்கையில் அரிசி விலை மேலும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை
இலங்கையில் அரிசியின் விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலம் அண்மிக்கின்ற போது இந்த விலை அதிகரிப்பு பதிவாகலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை அகில இலங்கை சிறு மற்றும் மத்திய அளவிலான அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பீ.கே ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், பெரும் போகத்தில் நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், பாரிய அளவிலான ஆலை உரிமையாளர்களும், நெல்லை கொள்வனவு செய்பவர்களும் கடந்த ஆண்டுகளை போல நெல்லை பதுக்கி வைக்கும் அபாயம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விவசாயத்துறை இராஜாங்க அமைச்சின் செயலாளர் அனில் விஜேசிறியிடம் ஊடகமொன்று வினவியபோது,
3 இலட்சம் மெற்றிக் டன் அளவில் நெல் கொள்வனவு செய்வதற்கு எதிர்ப்பார்த்துள்ள நிலையில் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள விலைக்கேற்ப அதனை கொள்வனவு செய்யவுள்ளதாகவும், எனவே அரிசிக்கான நிர்ணய விலையினை வழங்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
