இலங்கையில் எரிவாயு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
இலங்கையின் மிகப்பெரிய எரிவாயு விநியோகஸ்தர்களில் ஒன்ரான லாஃப்ஸ் கேஸ் பி.எல்.சி அதன் அனைத்து இறக்குமதியையும் நிறுத்தியுள்ளதால் எரிவாயு பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று கொழும்பின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தகவல் அளித்துள்ள லாஃப்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் யு.கே. திலக் டி சில்வா, கடன் கடிதங்களை (எல்.சி) திறப்பதில் ஏற்பட்ட சிரமங்கள் மற்றும் வங்கிகளுடன் வெளிநாட்டு நாணயத்தின் கடுமையான பற்றாக்குறை போன்ற இரண்டு முக்கிய காரணங்களால் இறக்குமதியை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
உலக சந்தை விலை உயர்ந்து வருவதால், முன்னைய அரசாங்கத்திடம் எரிவாயு சிலிண்டரின் (கொள்கலன்கள்) விலை அதிகரிப்புக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இருப்பினும், விலை உயர்வை வழங்குவதற்கு பதிலாக, விலையை குறைத்து தமது நிறுவனத்துக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது என்று டி சில்வா கூறினார்.
அதைத் தொடர்ந்து, 2019 ல் ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் இந்த விடயத்தை சரிசெய்யும் என்று உரையாற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் இந்த அரசாங்கமும் இந்த பிரச்சனையை தீர்க்கத் தவறிவிட்டது , என்று டி சில்வா கூறினார். இந்த நிலைமை காரணமாக, தமது நிறுவனத்துக்கு சுமார் 5.3 பில்லியன் ரூபாயை இழப்பு ஏற்பட்டது.
இந்தப் பின்னணியில், நிறுவனங்கள் பெரும் இழப்பைச் சந்தித்தபோது கடன் கடிதங்களை (எல்.சி) திறக்க வங்கிகள் பயப்படுகின்றன. அத்துடன், வங்கிகளில் வெளிநாட்டு நாணயத்தின் கடுமையான பற்றாக்குறை உள்ளது என்று டி சில்வா கோடிட்டுக்காட்டினார்.
இந்த இரண்டு காரணங்களால், வாடிக்கையாளர்களுக்கு இந்த நேரத்தில் சேவை செய்ய முடியவில்லை என்று அவர் தெரிவித்தார்.
எனவே பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை, இறக்குமதியை நிறுத்தி வைக்க வேண்டியுள்ளது.இது தமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.
இந்தநிலையில் தற்போது எரிவாயு பற்றாக்குறை இல்லை என்றாலும், இந்த பிரச்சினை தீர்க்கப்படும் வரை பற்றாக்குறை ஏற்படலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam
