இலங்கையில் எரிபொருள் பயன்படுத்துவோருக்கு அதிர்ச்சித் செய்தி! அமைச்சர் வெளியிட்ட தகவல்
இந்த மாதத்தில் எந்த நேரத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு ஒளிபரப்பான வானொலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
எரிவாயு கப்பல்கள் 3 துறைமுகத்தில் தரித்து நிற்கின்றது. டொலர் இல்லாமையிலேயே கப்பல்களை வரவழைத்துள்ளோம். எனினும் அதனை பெற்றுக் கொள்வதற்கு டொலர் இல்லாத பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
கடந்த 7, 8 நாட்களாக கப்பல்கள் தரித்து நிற்கின்றது. சீனாவிடம் 300 மில்லியன் டொலர் கடன் பெற்றோம், இந்தியாவிடம் 400 மில்லியன் டொலர் கடன் பெற்றோம், பங்களாதேஷிடம் 250 மில்லியன் டொலர் கடன் பெற்றோம், எனினும் இந்த ஒன்றுமே ஒரு மாதத்திற்கு போதுமான எரிபொருள் பெறுவதற்கு போதுமானதாக இல்லை.
இந்த நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு அபாயத்தைத் தவிர்ப்பதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஜனவரி மாதத்தில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 14 நிமிடங்கள் முன்
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri