சிறுநீரக வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சை நிறுத்தப்படும் அபாயம்
கொழும்பு மாளிகாவத்தை தேசிய சிறுநீரக வைத்தியசாலை உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள சிறுநீரக வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு காரணமாக எதிர்காலத்தில் சத்திரசிகிச்சை நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மருந்து கையிருப்பு சரியான முறையில் பராமரிக்கப்படாமையால் அவசரகால மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு சுகாதார அதிகாரிகள் தயாராக உள்ளதாக அதன் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த வைத்தியர் அலுத்கே,
"தேசிய சிறுநீரக வைத்தியசாலை உள்ளிட்ட சிறுநீரக வைத்தியசாலைகளில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிறுத்தப்படும் அபாயம் உள்ளதால் மருந்துகள் குறைந்துள்ளது.
சில மருந்துகள் கிடைக்காததால் எதிர்காலத்தில் அறுவை சிகிச்சை நிறுத்தப்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
