டெங்கு அபாயம் நீங்கவில்லை: நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவாகப் பதிவான போதிலும், டெங்கு பரவும் அபாயம் இன்னும் நீங்கவில்லை என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது.
பொதுமக்கள் தங்கள் சுற்றாடலில் நீர் தேங்கும் இடங்களை உடனுக்குடன் அகற்றித் தூய்மையாகப் பேணுமாறு சமூக வைத்திய விசேட நிபுணர் மருத்துவர் பிரஷிலா சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை சில மாவட்டங்களில் முதலில் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்து, அதன் பின்னரே நோயாளர்களின் எண்ணிக்கை உயரும் போக்கு காணப்படுகிறது.
எச்சரிக்கை
எனவே நுளம்பு பெருக்கம் குறித்து அலட்சியமாக இருந்தால் அது சமுதாயத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.

எவ்வாறாயினும் சுற்றாடலைத் தூய்மையாக வைத்துக்கொண்டு நுளம்புகள் பெருகுவதைத் தடுப்பதே இதற்கான சிறந்த தீர்வாகும் என இதன்போது தெரிவித்தார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 18