முகக்கவசம் அணியாதவர்களை தொட்டுத் தூக்குவதால் தொற்று ஏற்படலாம் - மக்கள் விசனம்
முகக்கவசம் அணியாத சிலரை பொலிஸார் தொட்டுத் தூக்கியோ அல்லது தொட்டு அழைத்துச் செல்வதாலோ கோவிட் தொற்று ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
நேற்றைய தினம் யாழ்.நகர்ப்பகுதியில் கோவிட் தடுப்பு சுகாதார நடைமுறைகளை மீறிச் செயற்பட்டவர்களை, பொலிஸார் கையில் பிடித்தும் தூக்கியும் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் கோவிட் தொற்று ஏற்பட்ட ஒருவரைத் தொட்டுத் தூக்கிய பின்னர் வேறு ஒருவரைத் தொட்டுத் தூக்குவதால் மற்றவருக்கும் கோவிட் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.இதனால் கோவிட் பரவுவதற்கு பொலிஸாரே வழி ஏற்படுத்துகின்றது போல் அமையும்.
எனவே சுகாதார நடைமுறைகளை மீறுவோரை இவ்விதமாகக் கைது செய்வது உகந்த செயல் அல்ல எனவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 46 நிமிடங்கள் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
