கிளிநொச்சியில் கோவிட் வைரஸ் தீவிரமாக பரவும் அபாயம்
கிளிநொச்சி நீதிமன்றம் முன்பாக சுகாதார நடைமறைகளை பின்பற்றாத மக்களால் கோவிட் 19 வேகமாக பரவும் அபாயம் காணப்படுகின்றது.
இன்று காலை முலதல் கிளிநொச்சி பொலிசார் முக கவசம் அணியாது நடந்து கொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தலை ஒலிபெருக்கி மூலம் விடுத்து வருகின்றனர்.
ஆயினும் பொது மக்கள் கோவிட் 19 அச்சுறுத்தல் தொடர்பில் கவலையின்றி செயற்பட்டு வருகின்றனர்.
இன்று காலைமுதல் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் முன்பாக இவ்வாறு பெருந்திரளான மக்கள் சமூக இடைவெளியின்றி குவிந்து காணப்பட்டனர்.
நீதிமன்ற நடவடிக்கைகளிற்காக வருகை தந்த மக்களை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உள்ளே அனுமதித்துள்ளது.
பிணை பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்த மக்கள் இவ்வாறு நீதிமன்ற வெளி வளாகத்தில் கூடி நிற்கின்றனர்.
ஏ9 வீதியில்
இவ்வாறு கூடி நிற்கும் மக்களை சுகாதார தரப்பினர் கட்டுப்படுத்த அல்லது மாற்று
நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என பலரும் எதிர்பார்கின்றனர்.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
