கோவிட் மற்றும் இன்புளுவன்சா இணைந்து ஏற்படுத்தும் ஆபத்து
இன்புளுவன்ஸா மற்றும் கோவிட் வைரஸ் ஒரே நேரத்தில் தொற்றுக்குள்ளானால், ஏற்படும் நோய் தொற்று தொடர்பில் வைத்திய நிபுணர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்த நோய்க்கு ப்லோரோனா என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நோய் தொற்றுக்குள்ளான பெண்ணொருவர், இஸ்ரேலில் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்ட பெண், கர்ப்பிணி என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நோய் தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். குழந்தை பிரசவிப்பதற்காக வைத்தியசாலையில், குறித்த பெண் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இந்த தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பெண் எந்தவொரு வைரஸ் தொற்றுக்கும் செலுத்தப்படும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள ப்லோரோனா நோய், இலகுவாக பரவக்கூடியது என வைத்தியர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan