7 மாவட்டங்களில் தொடரும் மண் சரிவு ஆபத்து
ஏழு மாவட்டங்களில் தொடர்ந்தும் மண் சரிவு ஆபத்து காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
களுத்துறை, கண்டி, கேகாலை, குருணாகல், மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி மாவட்டங்களில் மண் சரிவு ஆபத்து காணப்படுவதாக அந்த அமைப்பின் பேச்சாளர் கூறியுள்ளார்.
மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நீடித்து வருவதன் காரணமாக இந்த ஆபத்து உருவாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த ஏழு மாவட்டங்களில் மலை மற்றும் மலையடிவாரங்களில் வசிக்கும் மக்கள் மண் சரிவு அடையாளங்கள் சம்பந்தமான உன்னிப்பான அவதானத்துடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அதேவேளை கொழும்பு - கண்டி பிரதான வீதியின் மாவனெல்லையில் இருந்து கடுகன்னாவை வரையான பகுதியில் பழக்கடைகள் அமைந்துள்ள இடத்தில் மண் சரிவு அடையாளங்கள் தென்பட்டது. இதனையடுத்து அந்த வீதி பகுதி வாகன போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டு தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளது.
