போக்குவரத்து நெருக்கடி காரணமாக காய்கறி சந்தைகள் மூடப்படும் அபாயம்: காய்கறி வர்த்தகர் சங்கம்
மெனிங் சந்தை உள்ளிட்ட காய்கறிச் சந்தைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக காய்கறி வர்த்தகர் சங்கம் எச்சரித்துள்ளது.
தற்போதைய போக்குவரத்து நெருக்கடி காரணமாக விவசாயிகளின் உற்பத்திகள் மெனிங் சந்தை மற்றும் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு எடுத்து வரப்படுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
காய்கறிகளுக்குப் பெரும் தட்டுப்பாடு
போக்குவரத்து நெருக்கடி காரணமாக காய்கறிகளுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு அவற்றின் விலை கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தக்காளி ஒரு கிலோ 700 ரூபா வரை உயர்ந்துள்ளது. ஏனைய காய்கறிகளும் அவ்வாறே விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மெனிங் சந்தை வர்த்தகர்கள் தாங்களே வாடகை வாகனங்கள் மூலம் போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொண்டு விவசாயிகளிடம் நேரடியாக காய்கறிகளை கொள்வனவு செய்யும் தீர்மானத்துக்கு வந்துள்ளனர்.
எனினும் போதுமான அளவில் காய்கறிகள் கிடைக்காத பட்சத்தில் பொருளாதார மத்திய நிலையங்கள் மட்டுமன்றி மெனிங் சந்தையும் மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் மீண்டும் தொழில்நுட்பக் கோளாறு: கஞ்சன விஜேசேகர |








ஷாக்கிங் விஷயத்தை கூறிய செந்தில், கோபத்தில் திட்டிவிட்ட மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
