கனேடிய நகரமொன்றில் அதிகரித்துள்ள வெப்பநிலை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவின்(Canada) தென்மேற்கு ஒன்றாரியோ பகுதியில்அதிகமான வெப்பநிலை நிலவும் என அந்நாட்டு தேசிய வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த பகுதியில் ஆபத்தான வெப்பநிலை மற்றும் ஈரப்பதனுடன் கூடிய வெப்பநிலை நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இடிப்புயல் நிலைமை
மேலும் ரொறன்ரோ, நயகரா, ஓவன் சவுன்ட் மற்றும் கிங்ஸ்டன் ஆகிய பகுதிகளில் இவ்வாறு கடுமையான வெப்பநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சராசரியாக 35 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை நீடிக்கும் எனவும், ஈரப்பதன் நிலைமையுடன் பார்க்கும் போது சுமார் 40 முதல் 45 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை நீடிப்பது போன்று உணர நேரிடும் எனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, ரொறன்ரோவில் இடிப்புயல் நிலைமை நீடிக்கக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு விடுத்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam