உள்நாட்டு சந்தையில் பிரதான ஏற்றுமதி பயிர்களின் விலைகள் அதிகரிப்பு
பிரதான ஏற்றுமதி பயிர்களான கறுவா, மிளகு, சாதிக்காய், கிராம்பு மற்றும் கோப்பி உள்ளிட்டவைகளின் விலை உள்நாட்டு சந்தையில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் உள்நாட்டுச் சந்தையில் ஒரு கிலோகிராம் 500 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த மிளகு, தற்போது ஒரு கிலோகிராம் 900 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கறுவா ஒரு கிலோகிராம் 3 ஆயிரத்து 400 ரூபாயாகவும் கிராம்பு ஒரு கிலோ கிராம் ஆயிரத்து 400 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோகிராம் கோப்பி ஆயிரத்து 250 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு கிலோ பாக்கு ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வருட ஆரம்பத்திலிருந்து இது வரையான காலப்பகுதியில் குறித்த ஏற்றுமதி பயிர்களில் 45,000 மெட்ரிக் டன் வரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 20 மணி நேரம் முன்
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri