அதிகரிக்கும் ஒமிக்ரோன்:ரணில் கட்சியினருக்கு வழங்கிய ஆலோசனை
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புகள் மற்றும் அரசியல் செயற்பாடுகளை ஏற்பாடு செய்யும் போது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஒமிக்ரோன் வைரஸ் தொடர்பாக கூடுதல் கவனத்தை செலுத்தி செயற்படுமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, (Ranil Wickramasinghe) கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
சூம் தொழிற்நுட்பம் வழியாக கட்சியின் சிரேஷ்ட பிரதிநிதிகளுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் முன்னாள் பிரதமர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் ஒமிக்ரோன் நோயாளிகள் கண்டறியப்படும் நிலைமையில், அரசியல் அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது, கட்சியினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முக்கியத்துவம் பற்றியும் ரணில் இதன் போது தெளிவுப்படுத்தியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அங்கீகரித்த அரசியல் நோக்குக்கு அமைய எதிர்கால அரசியல் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பு செய்யும் போது, ஒமிக்ரோன் சம்பந்தமாக கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



