உலக சந்தையில் நிலக்கரி விலை உயர்வு :நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலும் உற்பத்தி பாதிக்கலாம்
நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரியை பெற்றுக்கொள்ள டொலர் இல்லாத பிரச்சினைக்கு மேலதிகமாக தற்போது மற்றுமொரு உலக அளவிலான நெருக்கடி உருவாகியுள்ளது.
உலக சந்தையில் நிலக்கரியின் விலை சடுதியாக அதிகரித்துள்ளமையே இதற்கு காரணம். உலகில் முன்னணி நிலக்கரி ஏற்றுமதி நாடான இந்தோனேசியா தனது ஏற்றுமதியை கடுமையாக குறைத்திருப்பது விலை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.
இந்த பிரச்சினை காரணமாகவே இலங்கை இறுதியான முன்வைத்திருந்த நிலக்கரி இறக்குமதிக்கான விலை மனுக்களை பெற விநியோகஸ்தர்கள் எவரும் முன்வரவில்லை.
விநியோகஸ்தர்கள் நிலக்கரிக்கு முற்பணத்தை செலுத்த வேண்டும் என கோரி இருப்பதும் நெருக்கடியை அதிகரித்துள்ளது. ஒரு மெற்றி தொன் நிலக்கரியை 100 டொலர்களுக்கு கொள்வனவு செய்ய முடிந்த நிலையில், தற்போது அதன் விலை 250 டொலர்களாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின் உற்பத்திக்கான செலவு பாரியவில் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.