இலங்கை மீதான சர்வதேசத்தின் கடும் நடவடிக்கைக்கு ஆதரவு: ரிஷி சுனக்
இலங்கையில் நடத்த பாரிய அட்டூழியங்களுக்கு நீதி வழங்குவதற்கான உறுதிப்பாட்டை, மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள பிரித்தானிய பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் ஐ.நா தீர்மானத்திலிருந்து விலகி நிற்கும் இலங்கை மீது கடுமையான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் முன்னெடுப்பதற்கான தனது ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளார்.
பிரித்தானிய கொன்சர்வேடில் கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தலுக்கு முன்னதாக ரிஷி சுனக் தமிழ் கொன்சர்வேட்டிவ்கட்சி உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத் தடை
அத்துடன் ரஷ்ய அதிகாரிகள் மீது பிரித்தானியா விதித்துள்ள பொருளாதாரத்தடைகளைப் போன்று, குற்றங்களுடன் தொடர்புடைய இலங்கை அதிகாரிகள் மீதும் இலக்கு வைக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளைப் விதிக்கும் சாத்தியம் குறித்தும் அவர் கரிசனை செலுத்தியுள்ளார்.
இது தொடர்பான முழுமையான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்குரிய பத்திரிக்கை கண்ணோட்டம்.





பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
