கோட்டாபயவுக்கு எதிராக களமிறங்கிய ரிஷாட் : நெருக்கடியில் ராஜபக்சர்கள்
தமக்கு எதிராக அவதூறு ஏற்படுத்தயாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வழக்கு தாக்கதல் செய்யவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளருடன் இணைந்து தமது அரசியல் இலாபங்களுக்காக தம்மைக் கைது செய்து 5 வருடங்கள் சிறையில் வைத்திருக்க உத்தேசித்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
பொய்யான அறிக்கை
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தனக்கு எதிராக பொய்யான அறிக்கைகளை வழங்குமாறு தனது எல்லைக்குட்பட்ட அரச அதிகாரிகளை அச்சுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும் அவர்கள் அவ்வாறு செய்ய மறுத்ததாகவும், இதன் காரணமாக தமக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளில் இருந்தும் தாம் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் எதிராக அடுத்த வாரம் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக ரிஷாட் பதியுதீன் அறிவித்துள்ளார்.
வழக்கு பதிவு செய்து குறித்த நபர்களிடம் இழப்பீடு கோருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri
