ரிஷாத் வைத்தியரை அச்சுறுத்திய சம்பவம் - சிறைச்சாலை அதிகாரிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
மகசின் சிறைச்சாலை வைத்தியருக்கு ரிஷாத்தால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறும் நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த சம்பவம் தொடர்பில் மகசின் சிறைச்சாலையின் 3 அதிகாரிகளிடம் 4 மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு மேலதிகமாக சிறைச்சாலைகள் திணைக்களமும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையில் தாம் முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கான சாட்சியங்கள் பெறப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்பான சமர்ப்பனங்களை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று நீதிமன்றில் முன்வைத்துள்ளனர்.
இதன்போது ரிஷாத் வைத்தியரை அச்சுறுத்திய போது அருகிலிருந்த மற்றுமொரு கைதியை சாட்சியாளராக நீதிமன்றுக்கு அழைத்து வாக்குமூலம் பெறுவதற்கு அனுமதியளிக்குமாறு கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவினர் மன்றில் கோரியுள்ளனர்.
இதற்கு அனுமதி வழங்கிய மேலதிக நீதவான் ரஜிந்ர ஜயசூரிய, சாட்சியாளரான குறித்த கைதியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
