ஜனாதிபதிக்கு பாரிய பொறுப்பு: ரிசாட் சுட்டிக்காட்டு
வடக்கு - கிழக்கு சார்ந்த மக்கள் ஜனாதிபதியின் கட்சிக்கு வாக்களித்துள்ளார்கள் எனவும், இதனால் ஜனாதிபதிக்கு பாரிய பொறுப்பு இருக்கிறது என்றும் வன்னி மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவான ரிசாட் பதியுதீன்(Rishad Bathiudeen) தெரிவித்துள்ளார்.
தனது வெற்றி குறித்து ஊடகங்ளுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வன்னி மாவட்டத்தில் 06 நாடாமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். ஜனாதிபதி தலைமையிலான கட்சி மேலதிக ஆசனம் உட்பட இரண்டு ஆசனங்களைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி
ஐக்கிய மக்கள் சக்தி ஒரு ஆசனத்தை பெற்று, மாவட்டத்தில் அதிகூடிய வாக்கை வன்னி மக்கள் எனக்கு வழங்கியுள்ளார்கள்.
எமது கட்சியில் போட்டியிட்ட அனைவரதும் அயராத முயற்சி தான் இந்த வெற்றிக்கு காரணம். மாவட்ட மக்களுக்கும் நன்றி கூறுகின்றோம்.
வன்னி மாவட்ட மக்களுக்கான பணியை நான் தொடர்ந்தும் முன்னெடுப்பேன். அதுபோல் அம்பாறை மாவட்டத்தில் எனது கட்சி தனியாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது.
மக்களுக்கு நன்றி
அந்த மக்களுக்கும் எனது நன்றிகள். புத்தளம், அனுராதபுரம், குருநாகல், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் எமது கட்சிக்கு மக்கள் வாக்களித்தாலும் வெல்ல முடியவில்லை.
அந்த மக்களுக்கும் எனது நன்றிகள். தேர்தலுக்கு பின் எனது பணி முன்னர் செய்ததை விட அதிகமாக இருக்கும் என்பதை கூறிக் கொள்கின்றேன்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
